பரிஸ் : ஜன்னல் வழியாக எலியை தூக்கி வீசிய பெண்! - வழக்கு பதிவு!
17 மாசி 2024 சனி 15:00 | பார்வைகள் : 11980
பெண் ஒருவர் எலி ஒன்றை தனது வீட்டின் ஜன்னல் வழியாக தூக்கி வீசியதை அடுத்து, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வெள்ளை எலி (hamster) ஒன்று வீட்டில் தொல்லையாக இருப்பதாக தெரிவித்து, அதனை உயிருடன் பிடித்த பெண் ஒருவர், அதனை தனது வீட்டின் ஜன்னல் வழியாக வெளியே வீசியுள்ளார். அதனை தனது தொலைபேசியில் படம் பிடித்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த காணொளியே அவருக்கு சிக்கலையும் ஏற்படுத்தியுள்ளது. குறித்த பெண் உயிருடன் இருக்கும் எலி ஒன்றை தூக்கி வீசியதில் குறித்த எலி உயிரிழந்துள்ளது. அதையடுத்து விலங்குகள் பாதுகாப்பு அமைப்பினர் கொந்தளித்துள்ளனர்.
அவர் மீது வழக்கு பதிவு செய்து, விரைவில் அவர் நீதிமன்றம் அழைக்கப்பட உள்ளார்.
பரிஸ் 15 ஆம் வட்டாரத்தின் rue Lecourbe வீதியில் உள்ள கட்டிடத்தின் 15 ஆவது தளத்தில் வசிக்கும் பெண் ஒருவரே தனது வீட்டின் ஜன்னல் வழியாக எலியை தூக்கி வீசியிருந்தார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan