உக்ரேனுக்கு பயணமாகும் ஜனாதிபதி மக்ரோன்!
17 மாசி 2024 சனி 12:58 | பார்வைகள் : 13059
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் உக்ரேனுக்கு பயணமாக உள்ளதாக அறிவித்துள்ளார். மார்ச் மாத நடுப்பகுதிக்குள் அவர் கீவ் நகருக்கு பயணிப்பார் என அறிய முடிகிறது.
நேற்று வெள்ளிக்கிழமை மாலை பரிசுக்கு வருகை தந்த உக்ரேனிய ஜனாதிபதி Volodymyr Zelensky. , பிரான்சுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார். பின்னர் ஊடகங்களுக்கு முன்பாக இருவரும் ஒப்பந்தங்களை பரிமாரிக்கொண்டனர்.
அதன்போது, ஜனாதிபதி மக்ரோனின் ‘உக்ரேன்’ பயணம் குறித்து தெரிவித்தார். ’மார்ச் நடுப்பகுதிக்கு முன்பாக’ கீவ் நகருக்கு பயணிக்க உள்ளதாக தெரிவித்தார்.
முன்னதாக, ஜனாதிபதி மக்ரோன் இந்த பெப்ரவரி மாதத்தில் அங்கு பயணிக்க திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2022 ஆம் ஆண்டு பெப்ரவரி 24 ஆம் திகதி இரஷ்யா-உக்ரேன் யுத்தம் ஆரம்பித்திருந்தது. வரும் 24 ஆம் திகதியுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைய உள்ளமை குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan