Viry-Châtillon : 17 சிறுவர்கள் அதிரடியாக கைது!
16 மாசி 2024 வெள்ளி 19:33 | பார்வைகள் : 12067
பெப்ரவரி 14, புதன்கிழமை மாலை Viry-Châtillon பகுதியில் மோதலுக்கு தயாரான 17 சிறுவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெப்ரவரி 14, புதன்கிழமை இரவு இக்கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது. Viry-Châtillon நகரில் வசிக்கும் 14 தொடக்கம் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் 17 பேர் கைது செய்யப்பட்டதுடன், அவர்களில் 15 பேர் காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர்.
மாலை 7 மணி அளவில் அப்பகுதியில் மிகப்பெரும் குழு மோதல் ஒன்றுக்கு தயாரானதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னரும் இதே குழு மோதலில் ஈடுபட்டிருந்தது. அதையடுத்தே காவல்துறையினர் மேற்படி சிறுவர்களை கைது செய்தனர்.
அவர்கள், சில நிமிடங்களில் அருகில் உள்ள கிராமம் ஒன்றுக்குள் நுழைந்து அங்கு மோதலுக்கு தயாராக இருந்த பல சிறுவர்களுடன் சண்டையிட தீர்மாதித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
13 வயதுக்கு கீழுள்ள இரு சிறுவர்கள் காவல்நிலையம் அழைத்துச் செல்லப்படவில்லை.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan