மரணதண்டைனையை ஒழித்தவர் சாவு!!
10 மாசி 2024 சனி 17:41 | பார்வைகள் : 12756
பிரான்சின் நீதியமைச்சராகவும், மரண தண்டனையை இல்லாது ஒழித்தவருமான ரொபேர் பதிந்தர் (Robert Badinter) சாவடைந்துள்ளார்
பிரோன்சுவா மித்தரோனின் ஆட்சிக்காலத்தில் 1981 ஆம் ஆண்டு முதல் 1986 ஆம் ஆண்டு வரை இவர் நீதியமைச்சராக இருந்துள்ளார். அந்தச் சமயத்திலேய இவர் பிரான்சில் மரணதண்டனையை இரத்துச் செய்து பெரும் வரலாற்றுத் திருப்பத்தை ஏற்படுத்தியிருந்தார்.

17ம் திகதி செப்டெம்பர் மாதம் 1981 ம் ஆண்டு இவர் பாராளுமன்றத்தில் மரணதண்டனை முற்றாகத் தடைசெய்து ஆற்றிய உரை வரலாற்றுச் சிறப்பு மிக்கது.


இவர் தனது 95 வயதில் நேற்றுச் சாவடைந்துள்ளார்.இவரிற்கான தேசிய வணக்கம் எதிர்வரும் புதன்கிழமை நடாத்தப்பட உள்ளதாக எலிசே மாளிகை அறிவித்துள்ளது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan