காதலனுக்கு நீங்கள் ஒரு சிறப்பு பரிசை கொடுக்க விரும்பினால்.....
8 மாசி 2024 வியாழன் 12:44 | பார்வைகள் : 7975
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14 அன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இன்றைய காதலர்கள் மத்தியில் அதன் மீதான மோகம் அதிகம் என்று சொல்லலாம். திருமணமாகாத ஜோடியாக இருந்தாலும் சரி, திருமணமான தம்பதியாக இருந்தாலும் சரி, ஒவ்வொருவரும் இந்நாளில் தங்கள் காதலை தங்கள் துணையிடம் வெளிப்படுத்த விரும்புகிறார்கள்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில், காதல் தினத்தன்று நீங்கள் உங்கள் காதலனுக்கு ஒரு பரிசு கொடுத்து அந்நாளை அவரை ஸ்பெஷல் செய்ய நினைக்கிறீர்கள் என்றால், இந்தக் கட்டுரை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அந்நாளில், அவருக்கு நீங்கள் கொடுக்கக்கூடிய சில சிறந்த பரிசு யோசனைகள் இங்கே உள்ளன. அவை நிச்சயம் உங்களுக்கு உதவும்.
உங்கள் கையால் செய்யப்பட்ட கிரீட்டிங் கார்டு: உங்கள் காதனுடைய விருப்பம் உங்களுக்கு அதிகம் தெரியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். உங்கள் கைகளால் செய்யப்பட்ட கிரீட்டிங் கார்டுகளை அவர்களுக்கு கொடுக்கலாம். அதுவும் அவர்களுக்கு பிடித்த நிறத்தில் அலங்கார பொருட்களை வைத்து அலங்கரித்து கொடுங்கள். கடைகளில் வாங்கும் கார்டை விட நீங்கள் செய்து கொடுப்பது நிச்சயமாக அவர்கள் விரும்புவார்கள்.
grooming kit: ஒவ்வொரு ஆணும் இதை விரும்புவார்கள். எனவே அவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் இந்த கிப்ட் சிறந்ததாக இருக்கும். நிச்சயம் அவர்கள் விரும்புவார்கள். இதை நீங்கள் ஆன்லைன் அல்லது ஆஃப்லைனில் வாங்கி இந்த காதலர் தினத்தன்று உங்கள் காதலனுக்கு பரிசாக கொடுங்கள்.
ஸ்கிராப்புக்: இது உங்களுக்கு ஒரு நல்ல யோசனையாக இல்லை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் நம்புங்கள், அவர்கள் தனியாக இருக்கும்போது அல்லது மன அழுத்தத்தில் இருக்கும்போது, இதில் இருக்கும் இருவருடைய புகைப்படங்கள், செய்திகள் அவர்களின் மகிழ்ச்சிக்கு காரணமாக இருக்கும். எனவே, இந்த பரிசு சிறந்ததாக இருக்கும்.
உடற்பயிற்சி பொருட்கள்: உங்கள் காதலனுக்கு ஜிம் அல்லது யோகா போன்ற உடல் செயல்பாடுகளில் சுறுசுறுப்பாக இருந்தால், அவருக்கு இந்த கிப்ட் நிச்சயம் மகிழ்ச்சியைக் கொடுக்கும். இதன் மூலம் அவர்கள் உந்துதலைப் பெறுவார்கள் மற்றும் ஆரோக்கியத்தையும் கவனித்துக்கொள்வார்கள். இது அவர்களின் இன்றைய வாழ்க்கை முறைக்கு மிகவும் முக்கியமானது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
24 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan