ஜனாதிபதி-பிரதமர் அவசர சந்திப்பு!!

8 தை 2024 திங்கள் 07:00 | பார்வைகள் : 16146
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மற்றும் பிரதமர் Elisabeth Borne ஆகிய இருவருக்கும் இடையில் அவசர சந்திப்பு ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது.
எலிசே மாளிக்கைக்கு வருகை தந்த பிரதமர், ஜனாதிபதியைச் சந்தித்து முக்கியவிடயங்கள் தொடர்பில் உரையாடினார்க்ள். அதில் குறிப்பாக அமைச்சர்கள் மாற்றம், பா-து-கலேயை பாதித்த வெள்ளம் மற்றும் இவ்வாரத்தில் பிரான்சில் ஆரம்பமாக உள்ள பனிப்பொழிவு போன்ற சாராம்சங்களை உள்ளடக்கி உரையாடப்பட்டதாக அறிய முடிகிறது.
அமைச்சர்கள் பலர் மாற்றியமைக்கப்பட உள்ளதாக பல செய்திகள் தொடர்ச்சியாக வெளிவரும் நிலையில், நாளை மறுநாள் 10 ஆம் திகதி அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற உள்ளது. அதன்போது சில அமைச்சர்கள் தங்களது பதவியில் இருந்து வேறு அமைச்சுப் பதவிக்கு மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
டிசம்பர் மாத இறுதியில் குடிவரவு சட்டத்திருத்ததை நடைமுறைப்படுத்தியதில் இருந்து அரசு மீது பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. அதன் காரணமாகவே இந்த ‘அமைச்சரவை சங்கீத கதிரை’ திட்டமிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1