காவல்துறை வீரரை மோதி தள்ளிட்டு தப்பி ஓடிய மகிழுந்து! - பெல்ஜிய காவல்துறையினரால் தேடப்படும் நபர் கைது!

5 தை 2024 வெள்ளி 21:49 | பார்வைகள் : 9165
காவல்துறை வீரர் ஒருவரை மோதி தள்ளிவிட்டு தப்பி ஓடிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் பெல்ஜிய காவல்துறையினரால் தேடப்பட்டு - சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவராவார்.
இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் இச்சம்பவம் Halluin (Nord) நகரில் இடம்பெற்றுள்ளது. 3.30 மணி அளவில் மகிழுந்தில் பயணித்த குறித்த நபரை காவல்துறை வீரர்கள் சிலர் கைது செய்ய முற்பட்டபோது, அவர் மகிழுந்தினால் வீரரை மோதித்தள்ளியுள்ளார். தூக்கி வீசப்பட்ட காவல்துறை வீரர் ஒருவர் கால் முறிவுக்கு உள்ளாகியுள்ளார். மேற்படி சம்பவத்தை வீதியில் பயணித்த பயணி ஒருவர் தனது மகிழுந்தில் இருந்தபடி காணொளியாக பதிவு செய்திருந்தார். அது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிய குறித்த நபர் சில நிமிடங்களில் கைது செய்யப்பட்டதாக அறிய முடிகிறது.
குறித்த நபர் பெல்ஜிய குற்றவாளி எனவும், சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர் எனவும் உள்துறை அமைச்சர் Gérald Darmanin தெரிவித்தார்.
இரண்டு கால்களும் முறிவுக்குள்ளான நிலையில் காவல்துறை வீரர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1