Poissy : ஒன்பது வயது சிறுவனைக் காணவில்லை! - சாட்சியங்களுக்கு அழைப்பு!
.jpg)
5 தை 2024 வெள்ளி 17:32 | பார்வைகள் : 11671
Poissy (Yvelines) நகரைச் சேர்ந்த ஒன்பது வயது Krys N எனும் சிறுவனைக் காணவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தகவல் தெரிந்தவர்கள், சிறுவனை கண்டவர்கள் உடனடியாக அழைப்பு மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.
சிறுவன் நேற்று வியாழக்கிழமை மாலை 4.10 மணிக்கு Poissy நகரில் வைத்து காணாமல் போயுள்ளார். 1.50 மீற்றர் உயரமும், மெல்லிய மற்றும் கட்டை கறுப்பு தலைமுடியும் உடையவர் எனவும், இறுதியாக கறுப்பு நிற மேலங்கி அணிந்திருந்ததாகவும் அடையாளம் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த சிறுவனைக் கண்டவர்கள் உடனடியாக அழைக்கும் படி Conflans-Sainte-Honorine நகர காவல்நிலைய தொலைபேசி இலக்கத்துக்கு (01.34.90.47.57.) அழைக்குமாறு கோரப்பட்டுள்ளது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1