வீடொன்றில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு! - இவ்வருடத்தின் முதலாவது ‘பெண் படுகொலை’!!
5 தை 2024 வெள்ளி 07:37 | பார்வைகள் : 10589
சென்ற 2023 ஆம் ஆண்டில் 94 பெண்கள் குடும்ப வன்முறையில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், இவ்வருடத்தின் முதலாவது பெண் படுகொலை கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
ஜனவரி 1 ஆம் திகதி திங்கட்கிழமை Nègrepelisse (Tarn -et-Garonne) நகரில் உள்ள வீடொன்றில் இருந்து பெண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டது. 62 வயதுடைய குறித்த பெண் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். அவரது கணவர் 75 வயதுடையவர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில், அவரது சடலமும் மீட்கப்பட்டது.
இவ்வருடத்தில் இடம்பெற்ற முதலாவது குடும்ப வன்முறை படுகொலை இதுவாகும். 2022 ஆம் ஆண்டில் 118 பெண்களும், 2023 ஆம் ஆண்டில் 94 பெண்களும் குடும்ப வன்முறையில் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan