2023 ஆம் ஆண்டில் - குடும்ப வன்முறையில் 94 பெண்கள் பலி!!
2 தை 2024 செவ்வாய் 18:24 | பார்வைகள் : 10545
கடந்த 2023 ஆம் ஆண்டில் குடும்ப வன்முறை காரணமாக 94 பெண்கள் பலியாகியிருந்ததாக நீதி அமைச்சகம் (ministère de la Justice தகவல் வெளியிட்டுள்ளது.
சென்ற 2022 ஆம் ஆண்டு 113 பெண்கள் கொல்லப்பட்டிருந்த நிலையில், 2023 ஆம் ஆண்டில் 94 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ”பெண்கள் மீதான தாக்குதலை எதிர்த்து போராடுவதற்கு நேரம் எடுக்கும் என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் பெண் கொலைகளைத் தடுப்பதற்கு பிரெஞ்சு நீதி அமைப்பின் அர்ப்பணப்பு பலனைத்தருகிறது!” என அமைச்சர் Eric Dupond-Moretti குறிப்பிட்டார்.
குடும்ப வன்முறைக்கு ஆளாகுவதை தடுப்பதற்கு ஏற்ற இலகுவான வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளது. அதுவே சென்ற ஆண்டு வன்முறைகள் வீழ்ச்சியடைந்துள்ளமைக்கு காரணம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், கொவிட் 19 காலத்தில் பதிவான குடும்ப வன்முறையோடு ஒப்பிடுகையில் (2021 ஆம் ஆண்டு 136 பெண்கள் கொல்லப்பட்டிருந்தனர்.) இது கணிசமான வீழ்ச்சி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
24 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan