2023 ஆம் ஆண்டில் பிரான்சில் அதிகம் வசூலித்த திரைப்படம்!!
2 தை 2024 செவ்வாய் 11:00 | பார்வைகள் : 12557
சென்ற 2023 ஆம் ஆண்டு பிரெஞ்சு சினிமாத்துறை இலாபகரமான ஆண்டாக அமைந்திருந்தது. 181 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை அந்த ஆண்டு பெற்றிருந்தது.
சென்ற 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 1.9% சதவீதத்தால் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் Astérix et l'empire du milieu திரைப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது. அதனை 4.5 மில்லியன் பேர் பார்வையிட்டிருந்தனர்.

Alibi. com 2 எனும் திரைப்படமும் மிகப்பெரும் வெற்றியடைந்திருந்தது. அதனை 4.2 மில்லியன் பேர் பார்வையிட்டிருந்தனர். மேலும் ஏழு பிரெஞ்சு திரைப்படங்கள் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்களால் பார்வையிடப்பட்டிருந்தது.
அதேவேளை, மூன்று அமெரிக்கத்திரைப்படங்கள் (Super Mario Bros - 7.3 மில்லியன், Barbie - 5.8 மில்லியன், Avatar: The Way of Water - 5 மில்லியன்) ஐந்து மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைச் சந்தித்திருந்தது.
மொத்தமாக 42 திரைப்படங்கள் ஒரு மில்லியனுக்கும் அதிமானோராலும், 16 திரைப்படங்கள் 2 மில்லியனுக்கும் அதிமானோராலும், 3 திரைப்படங்கள் (மூன்றுமே அமெரிக்க திரைப்படங்கள்) ஐந்து மில்லியனுக்கும் அதிகமானோரால் பார்வையிடப்பட்டிருந்தது.
சென்ற ஆண்டில் பிரான்சில் அதிகளவு பார்வையாளர்களைச் சந்தித்து அதிகம் வசூலித்த திரைப்படமாக Super Mario Bros திரைப்படம் உள்ளது.

11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan