"ஜனவரி சேலஞ்ச்" (Le défi de janvier) மது இல்லா மாதம், பிரான்ஸ் சுகாதாரத்துறை அழைப்பு.
2 தை 2024 செவ்வாய் 07:35 | பார்வைகள் : 13748
புதிய ஆண்டின் முதல் மாதமான ஜனவரி மாதத்தை மதுப்பழக்கம் உள்ளவர்கள், மது அருந்தாத மாதமாக கடைப்பிடிக்கும் "ஜனவரி சேஞ்ச்" செயலில் ஈடுபடுமாறு பிரான்ஸ் சுகாதாரத்துறை அழைப்பு விடுத்துள்ளது.
கடந்த ஆண்டு 16 000 பிரெஞ்சு மக்கள் இந்த செயல்திட்டத்தில் தம்மை பதிவுசெய்து கடைப்பிடித்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசு இந்த திட்டத்திற்கு ஆதரவு தரவில்லை, நிதியுதவியும் செய்யவில்லை இதனால் அதிகளவு பிரச்சாரம் செய்யவில்லை என மருத்துவ சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.
பிரான்சில் 17 வயதினரில் 81% சதவீதமானோர் வாழ்நாளில் சில சந்தர்ப்பங்களில் மது அருந்தி உள்ளனர், அதேபோல் 70% சதவீத பிரெஞ்சு பெரியவர்கள்" இந்த காலகட்டத்தில் "சிறுவர்களை மது அருந்த அனுமதிப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை" என்று தெரிவித்துள்ளனர். இந்த நிலை அடுத்த சந்ததியும் மதுவுக்கு அடிமையாக்கும் நிலைப்பாட்டை ஏற்படுத்தும் எனவும் பிரான்ஸ் சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan