பரிஸ் 18 ஆம் வட்டாரத்தில் பாரிய தீ விபத்து! - ஆறு பேர் காயம்!
1 தை 2024 திங்கள் 16:57 | பார்வைகள் : 12527
பரிஸ் 18 ஆம் வட்டாரத்தில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்ற பாரிய தீ விபத்தில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.
rue Picard வீதியில் உள்ள ஏழு அடுக்கு கட்டிடத்தின் ஐந்தாவது தளத்தில் பிற்பகல் 1 மணிக்கு தீ பரவ ஆரம்பித்தது. தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 90 வரையான தீயணைப்பு வீரர்கள் இணைந்து தீயை கட்டுப்படுத்த போராடினர்.
இச்சம்பவத்தில் ஆறு பேர் காயமடைந்தனர். அவர்களில் மூவர் பலத்த காயமடைந்து அவசரப்பிரிவு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
தீ பரவலுக்குரிய காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan