விசேட செய்தி : EUROSTRAR சுரங்கத்துக்குள் வெள்ளம்! - போக்குவரத்து தடை!!
30 மார்கழி 2023 சனி 13:14 | பார்வைகள் : 12683
EUROSTRAR சுரங்கத்துக்குள் தண்ணீர் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் தெற்கு பகுதியில் உள்ள சுரங்கத்துக்குள் மழை வெள்ளம் நுழைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக மாலை 5 மணி வரை போக்குவரத்துக்கள் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நேரத்துள்ளாக 14 தொடருந்து சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
புதுவருட விடுமுறையினை கொண்டாடும் நோக்கில் மிக அதிகளவான பயணிகள் பயணப்படும் நிலையில், பயணிகளுக்கு போக்குவரத்து தடை பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan