உருகும் ஏ23ஏ பனிப்பாறையில் அழகிய வடிவங்கள்!
16 தை 2024 செவ்வாய் 10:13 | பார்வைகள் : 7942
முழுவதும் பனியால் சூழப்பட்ட, பனிப்பாறைகள் நிறைந்த அழகான கண்டமாக அன்டார்க்டிகா காணப்படுகின்றது.
இங்கு மனிதர்கள் வசிப்பது முடியாததால், ஆராய்ச்சியாளர்களும், சுற்றுலா பயணிகளும் மட்டுமே சென்று பார்வையிட்டு வருகின்றனர்.
இங்குள்ள பனிப்பாறைகளில் மிக பெரியது, ஏ23ஏ (A23a). இந்த பனிப்பாறை 1986களிலேயே அப்பிரதேசத்தின் கடல் பகுதியிலிருந்து உடைந்து நகர்ந்து செல்ல தொடங்கியது.
சுமார் 30 ஆண்டுகளாக வெட்டல் கடல் (Weddell Sea) பகுதியின் ஆழத்தில் சிக்கி அங்கேயே நிலைநிறுத்தப்பட்டிருந்த ஏ23ஏ பனிப்பாறை, சுமார் 4 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது.
அங்கு உள்ள பனி நீர் சுழற்சியால் தென் ஆர்க்னி தீவை (South Orkney Islands) நோக்கி இது மெதுவாக பயணிக்க தொடங்கியுள்ளது.
பனிப்பாறையின் நகர்வை டிரோன் கமரா மூலம் படம் பிடித்த நிபுணர் குழு ஒன்று அப்புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
நாளாந்தம் சிறிதாக உருகும் ஏ23ஏ பனிப்பாறையில் மிக பெரிய வளைவுகளும், குகைகளும் இயற்கையாக உருவாகியுள்ளன.
எப்பொழுது என உறுதியிட்டு கூற முடியாவிட்டாலும் சில ஆண்டுகளில் ஏ23ஏ முழுவதும் உருகி விடும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
23 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan