சுங்கவரித்துறையினர் உள்ளிட்ட ஒன்பது பேர் - போதைப்பொருள் கடத்தல் குற்றத்தில் கைது!!
14 தை 2024 ஞாயிறு 09:46 | பார்வைகள் : 10015
ஓர்லி விமான நிலையத்தில் பணிபுரியும் சுங்கவரித்துறையினர் உள்ளிட்ட ஒன்பது பேரினை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
Hauts-de-Seine மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய போதைப்பொருள் கடத்தல் கும்பல் ஒன்று நேற்று முன்தினம் ஜனவரி 12 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளது. எல்லைப் பாதுகாப்பு காவல்துறையினர், சுங்கவரித்துறையினர் உள்ளிட்ட ஒன்பது பேர் அவர்களில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
Martinique தீவில் இருந்து சூட்கேஸ் ஒன்றில் 47 கிலோ கொக்கைன் போதைப்பொருள் குறித்த ஓர்லி விமான நிலையமூடாக பிரான்சின் பிரதான நிலப்பகுதிக்கு கொண்டுவரப்பட்டது. இந்த கடத்தலில் தொடர்புடையவர்களையே காவல்துறையினர் கைது செய்தனர்.
47 கிலோ கொக்கைன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan