பரிசில் 600,000 பலியாக காரணமாக இருந்த உறை பனி! - வரலாற்று சம்பவம்!!
9 தை 2024 செவ்வாய் 18:35 | பார்வைகள் : 18116
இன்று பரிஸ் உட்பட நாடு முழுவதும் பனிப்பொழிவு பதிவாகி வருகிறது. போக்குவரத்து வேகம் குறைக்கப்பட்டுள்ளது. பத்து வரையான மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. கடும் குளிர் காரணமாக 600,000 பேர் வரை உயிரிழந்த சம்பவம் ஒன்று பரிசில் இடம்பெற்றது உங்களுக்குத் தெரியுமா..??
1954 ஆம் ஆண்டு பரிசில் கடும் குளிர் நிலவியது. வரலாற்று ஏடுகளில் பதிவானவற்றில் அதிகூடிய குளிர் கொண்ட ஆண்டு இதுவாகும். பரிசில் கிட்டத்தட்ட -25℃ குளிர் பதிவாகியிருந்தது.28 செ.மீ பனிப்பொழிவு அன்றைய ஆண்டில் பரிசில் கொட்டித்தீர்த்திருந்தது.
ஆனால், முன்னதாக 1789 ஆம் ஆண்டு பதிவான குளிர் தான் மிக கொடூரமான வரலாற்றுச் சம்பவமாக மாறியிருந்தது. அந்த ஆண்டு நவம்பர் 23 முதல், ஜனவரி 14 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக -7℃ எனும் சராசரி குளிர் நிலவியது. அதிகபட்சமாக -20℃ குளிர் நிலவியது. நீண்ட நாட்கள் தொடர்ந்த இந்த குளிரினால் மக்கள் பெரும் இன்னல்களைச் சந்தித்திருந்தனர். சேகரிப்பில் இருந்த விறகுகள் தீர்ந்துவிட,, வெப்பமூட்ட முடியாமல் பலர் இறக்கத் தொடங்கினார்கள்.
தொடர் பனிப்பொழிவு வீடுகளையே மூடியது. வெளியில் பயணம் செய்ய முடியாமல் மக்கள் தவித்தனர். கிட்டத்தட்ட 60 செ.மீ பனிப்பொழிவு அந்த காலப்பகுதியில் கொட்டித்தள்ளியது.
அந்த ஆண்டு பரிசில் மட்டும் 600,000 பேர் குளிரில் உறைந்து பலியானதாக தரவுகள் தெரிவிக்கின்றன.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan