கோல்டன் க்ளோப் விருது பெற்ற பிரெஞ்சு பெண் இயக்குனருக்கு ஜனாதிபதி வாழ்த்து!
8 தை 2024 திங்கள் 15:29 | பார்வைகள் : 10990
«Anatomie d’une chute» எனும் பிரெஞ்சுத் திரைப்படத்துக்கு இரட்டை கோல்டன் க்ளோப் விருதுகள் கிடைத்துள்ளன. அத்திரைப்படத்தின் இயக்குனர் Justine Triet இனை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் பாராட்டியுள்ளார்.

”பிரெஞ்சுத் திரைப்படம் கோல்டன் க்ளோப் விருது பெறுவதை காண்பது பெருமையாக இருக்கிறது. இயக்குனர் Justine Triet இற்கு எனது வாழ்த்துக்கள். அத்திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் உள்ளிட்ட அனைத்து படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துக்கள்!” என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தனது X சமூவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
«Anatomie d’une chute» எனும் இந்த திரைப்படம் சென்ற ஆண்டு ’சிறந்த வெளிநாட்டு திரைப்படம்’ பிரிவு ஓஸ்கார் விருதினையும், சிறந்த திரைக்கதைக்காக Palme d'Or (கேன்ஸ் திரைப்பட விருது) விருதினையும் பெற்றிருந்தது.

🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan