Villers-sur-Marne : துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம்! - இருவர் கைது!
8 தை 2024 திங்கள் 15:07 | பார்வைகள் : 9335
பரிஸ் புறநகரில் சனிக்கிழமை மாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
பரிசின் கிழக்கு புறநகரான Hautes-Noues (Villers-sur-Marne) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சனிக்கிழமை மாலை காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து, சம்பவம் இடம்பெற்ற கல்லறை அமைந்துள்ள பகுதிக்கு அருகே விரைந்து சென்றனர்.
அங்கு ஒரு சிலர் மோதலில் ஈடுபடுவதை அவதானித்துள்ளனர். அத்துடன் ஒருவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி காயமடைந்திருப்பதையும் அவதானித்துள்ளனர். அவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
இத்துப்பாக்கிச்சூடு சம்பவ தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவந்த காவல்துறையினர், நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை இருவரைக் கைது செய்தனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan