Montreuil : கஞ்சா தோட்டம் வைத்திருந்தவர் கைது! - 350 கஞ்சா செடிகள் பறிமுதல்!!

8 மார்கழி 2023 வெள்ளி 20:00 | பார்வைகள் : 9009
Montreuil நகரில் வசிக்கும் ஒருவர் தனது வீட்டில் கஞ்சா செடிகளை வளத்துள்ளார். அவரைக் கைது செய்த காவல்துறையினர்., அங்கிருந்து 350 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர்.
டிசம்பர் 5 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை, சுங்கவரித்துறையினர் மற்றும் காவல்துறையினர் மோப்பநாய்களின் உதவியுடன் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் குறித்த நபர் சிக்கியுள்ளார். தனது வீட்டின் உள்ளே உள்ள அறையில் சிறிய பொதிகளில் வளர்க்கப்பட்ட 350 கஞ்சா செடிகளை கண்டுபிடித்து அவற்றை கைப்பற்றினர். அத்துடன் அதன் உரிமையாளரையும் கைது செய்தனர்.
வீட்டின் அறை ஒன்றில் செயற்கை வெப்பத்தை உருவாக்கும் விளக்குகள், வடிகாலமைப்பு பகுதிகள் என பல திட்டமிட்டல்களுடன் இந்த கஞ்சா வளர்ப்பு பணிகள் இடம்பெற்றுள்ளன.
அதேபோல் அவரிடம் சணல் செடிகளின் விதைகளும் கைப்பற்றப்படுள்ளன. அமெரிக்காவில் இருந்து அவை தருவிக்கப்பட்டதாகவும் அறிய முடிகிறது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1