பரிசில் இருந்து தெற்கு பிரான்சுக்கு புதிய இரவுநேர தொடருந்து!!
8 மார்கழி 2023 வெள்ளி 17:56 | பார்வைகள் : 14170
பரிசில் இருந்து பிரான்சின் தெற்கு பகுதி நோக்கி பயணிக்கும் புதிய இரவு நேர தொடருந்து ஒன்றுக்கு ஆரம்பிக்கப்பட உள்ளது.
நாளை மறுநாள், டிசம்பர் 10, ஞாயிற்றுக்கிழமையில் இருந்து இந்த தொடருந்து சேவை பரிசின் Aurillac நிலையத்தில் இருந்து Auvergne-Rhône-Alpes மாகாணத்தின் Cantal நகரம் வரை பயணிக்க உள்ளது. வாரத்தின் வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 7.40 மணிக்கு பரிசில் இருந்து தொடருந்து புறப்படும். காலை 8.20 மணிக்கு Cantal நகரைச் சென்றடையும்.

இந்த இரவுநேர தொடருந்து சேவை முன்னதாக 2000 ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது 23 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan