காஸா : இதுவரை 154 பிரெஞ்சு மக்கள் வெளியேற்றம்!!
8 மார்கழி 2023 வெள்ளி 12:42 | பார்வைகள் : 10717
இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் ஆரம்பித்ததில் இருந்து இதுவரை 154 பிரெஞ்சு மக்கள் காஸா பகுதியில் இருந்து வெளியேறியுள்ளதாக பிரெஞ்சு வெளியுறவுத்துறை அமைச்சகம் (ministère des Affaires étrangères) அறிவித்துள்ளது.
நேற்று வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “புதன்கிழமை புதிதாக 16 பேர் காஸா பகுதியில் இருந்து வெளியேறியதாகவும், கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதியில் இருந்து (இஸ்ரேல்-ஹமாஸ் தாக்குதல் ஆரம்பித்ததில் இருந்து) 154 பேர் அங்கிருந்து வெளியேறியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, இதுவரை ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலில் 40 பிரெஞ்சு மக்கள் கொல்லப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan