இணையத்தளங்களில் கிறிஸ்துமஸ் பரிசுப் பொருட்கள். அவதானம்.
26 மார்கழி 2023 செவ்வாய் 08:36 | பார்வைகள் : 15409
கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் இவ்வாண்டு இணையத்தளங்களில் பரிசுப்பொருட்கள் 25ம், 26ம் திகதிகளில் விற்பனை செய்வது அதிகரித்து உள்ளது. என தெரியவருகிறது.
அதாவது கிறிஸ்துமஸ் தினத்தில் தமக்கு வழங்கப்பட்ட பரிசுப்பொருட்களை அவர்கள் பிறருக்கு இணையத்தளங்களில் விற்பனை செய்யும் அளவே இவ்வாறு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இது 26% விதத்தால் அதிகரித்துள்ளது.
காரணம் ஒருவருக்கு பரிசுப்பொருட்களை வழங்கும் போது அது அவருக்கு விருப்பம் அல்லாத அல்லது தேவையற்ற பொருளாக அமைந்து விடுகிறது, எனவே அவர் அதனை இணையத்தில் வாங்கிய விலையை விடவும் மலிவான விலைக்கு விற்பனை செய்துவிட்டு தனக்கு தேவையான பொருளை வாங்க முற்படுகிறார். இதனால் பணம் விரையமாகும்.
அதேபோல் அவர் விற்பனை செய்யும் பொருள், இணையத்தில் மலிவாக கிடைப்பதால் மற்றொருவர், மலிவு என்பதற்காக தனக்கு தேவையற்ற பொருளாக இருந்தாலும் வாங்கி அலமாரிகளில் அடுக்கி வைக்கிறார். இங்கேயும் பணம் தேவையற்ற செலவாகிறது.
இந்த செயல்பாட்டால் அதிகம் நன்மை அடைவது விற்பனை நிறுவனங்கள்தான் மக்கள் அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan