Meaux : பெண் மற்றும் அவரது நான்கு பிள்ளைகள் சடலமாக மீட்பு! - கணவன் தலைமறைவு!!

26 மார்கழி 2023 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 15768
வீடொன்றில் இருந்து பெண் ஒருவர் மற்றும் அவரது நான்கு பிள்ளைகளும் சடலங்களாக மீட்கப்பட்டனர்.
நேற்று திங்கட்கிழமை இரவு இச்சம்பவம் Meaux (Seine-et-Marne) நகரில் இடம்பெற்றுள்ளது. 9 மணி அளவில் காவல்துறையினர் அழைக்கப்பட்டு குறித்த வீட்டின் கதவு உடைக்கப்பட்டது. பின்னர் அங்கு பெண் ஒருவரும் அவரது நான்கு பிள்ளைகளும் கட்டிலில் உயிரிழந்து சடலமாக கிடப்பதை காவல்துறையினர் பார்த்துள்ளனர். சடலங்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது.
38 வயதுடைய அப்பெண்ணின் கணவர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவர் தேடப்பட்டு வருகிறார். அவரை காவல்துறையினர் முன்னதாகவே குடும்ப வன்முறையினால் அறியப்பட்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1