பரிஸ் : நிர்வாக தடுப்பு மையத்தில் இருந்து 11 அகதிகள் தப்பி ஓட்டம்!
25 மார்கழி 2023 திங்கள் 13:38 | பார்வைகள் : 16759
பரிஸ் 12 ஆம் வட்டாரத்தில் உள்ள அகதிகள் தடுப்பு மையத்தில் (Centre de rétention administrative de Vincennes) இருந்து 11 அகதிகள் தப்பி ஓடியுள்ளனர்.
இன்று திங்கட்கிழமை காலை 7 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த தடுப்பு மையத்தில் தங்கியிருந்த அகதிகள் ஜன்னல் ஒன்றை உடைத்து அதன்வழியாக தப்பிச் சென்றுள்ளனர். மொத்தமாக 11 அகதிகள் தப்பிச் சென்றதாக காலை 9 மணிக்கு உறுதிப்படுத்தப்பட்டது.
அவர்களில் S கண்காணிப்பு பட்டியலில் உள்ள ஆபத்தான அகதிகள் எவரும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே தடுப்பு முகாமில் கடந்தவாரம் மோதல் ஒன்று இடம்பெற்றதாகவும், அகதிகள் பலர் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan