Essonne : 409 கிலோ போதைப்பொருள் மீட்பு! - ஆறுபேர் கைது!!
22 மார்கழி 2023 வெள்ளி 11:53 | பார்வைகள் : 9452
Fleury-Mérogis (Essonne) நகரில் 409 கிலோ எடையுள்ள கஞ்சா போதைப்பொருளினை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
புதன்கிழமை காலை இந்த போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. அங்குள்ள கட்டிடம் ஒன்றில் இருந்து வாகனம் ஒன்றில் போதைப்பொருள் ஏற்றப்பட்டுக்கொண்டிருந்த நிலையில், காவல்துறையினர் தலையிட்டு அதனை தடுத்து நிறுத்தனர். அங்கு கடத்தப்பட்ட கஞ்சா அடைக்கப்பட்ட பெட்டிகளை பறிமுதல் செய்தனர்.
17 தொடக்கம் 26 வயதுடைய ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் சிலரை காவல்துறையினர் முன்னதாகவே அறிவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைப்பற்ற போதைப்பொருளின் மதிப்பு 1.4 மில்லியன் யூரோக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan