La Rochelle துறைமுகத்துக்கு வந்தடைந்த கப்பலில் 120 கிலோ கொக்கை! - ஏழு பேர் கைது!
20 மார்கழி 2023 புதன் 16:26 | பார்வைகள் : 9020
பிரான்சில் உள்ள ஆறாவது மிகப்பெரிய துறைமுகமான La Rochelle இற்கு பிரேசிலில் இருந்து வருகை தந்த கப்பல் ஒன்றில் 120 கிலோ கொக்கைன் போதைப்பொருள் கடத்தி வரப்பட்டிருந்தது. சென்ற ஆண்டு மே மாதம் இடம்பெற்ற இந்த கடத்தல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் காவல்துறையினர், இதுவரை ஏழு பேரினை கைது செய்துள்ளனர்.
2022 ஆம் ஆண்டு மே மாதம் குறித்த துறைமுகத்துக்கு குறித்த கப்பல் வந்தடைந்தது. அதன் இயந்திரத்தை குளிர்விப்பதற்காக கடல் நீர் கடந்து செல்லும் பகுதி ஒன்றின் பின்னால் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை சுங்கவரித்துறையினர் கண்டுபிடித்தனர். லத்தீர் அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் இதுபோன்ற கடத்தலினை பிரான்ஸ் முதன்முறையாக காண்கிறது. மொத்தமாக அதில் 124.28 கிலோகிராம் கொக்கைன் போதைப்பொருள் இருந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறையினர், மார்செய், நீஸ் உள்ளிட்ட நகரங்களில் இருந்து ஆறுபேரினை கைது செய்தனர். 45 தொடக்கம் 65 வரையான வயதுடையவர்களே கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், இந்த கடத்தல் தொடர்பில் ஏழாவது நபராக கடந்த 17 ஆம் திகதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan