பரிஸ் : 19 ஆம் வட்டாரத்தில் இருந்து அகதிகள் வெளியேற்றம்!!
12 மார்கழி 2023 செவ்வாய் 13:55 | பார்வைகள் : 8914
பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் பாதுகாப்பற்ற முறையில் சிறிய கூடாரங்களில் தங்கியிருந்த நூற்றுக்கணக்கான அகதிகள் இன்று செவ்வாய்க்கிழமை காலை வெளியேற்றப்பட்டனர்.
19 ஆம் வட்டாரத்தில் உள்ள canal de l'Ourcq மேம்பாலத்தின் கீழ் தங்கியிருந்த அகதிகளே வெளியேற்றப்பட்டனர். சிறிய கூடாரங்களில் மிகவும் சுகாதாரமற்ற முறையில் கடும் குளிரில் சிக்கித்தவித்து வரும் அகதிகளை காவல்துறையினர் மற்றும் தொண்டு நிறுவன ஊழியர்கள் இணைந்து வெளியேற்றினர். பேருந்துகளில் அவர்கள் ஏற்றப்பட்டு இல் து பிரான்சின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
வெளியேற்றத்தின் போது அகதிகள் பலர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், வெளியேற்றத்தை விரும்பவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி வெளியேற்றமானது இவ்வருடத்தில் பரிசில் மேற்கொள்ளப்படும் 35 ஆவது அகதிகள் வெளியேற்றமாகும்.









திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan