4 ஆவது தடவையாக றக்பி உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது தென்னாபிரிக்கா !

29 ஐப்பசி 2023 ஞாயிறு 08:52 | பார்வைகள் : 6866
2023 ஆம் ஆண்டுக்கான றக்பி உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றிபெற்று 4 ஆவது தடவையாக றக்பி உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.
உலகக் கிண்ண றக்பி தொடரின் இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை (29) பிரான்ஸில் இடம்பெற்றது.
இறுதிப் போட்டியில் நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதின.
இந்த போட்டியில் தென்னாபிரிக்க அணி 12: 11 என்ற அடிப்படையில் வெற்றி பெற்று றக்பி உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.
அத்துடன், தென்னாபிரிக்க அணி றக்பி உலகக் கிண்ணத் தொடரை கைப்பற்றும் நான்காவது சந்தர்ப்பம் இதுவாகும்.
இதற்கு முன்னர் கடந்த 1995 ஆம் ஆண்டிலும் 2007 ஆம் ஆண்டிலும் 2019 ஆண்டிலும் தென்னாபிரிக்க அணி றக்பி உலகக் கிண்ணத்தை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1