மெக்சிகோவில் ஓடிஸ் சூறாவளி - அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
31 ஐப்பசி 2023 செவ்வாய் 08:19 | பார்வைகள் : 8596
மெக்சிகோவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட ‘ஓடிஸ்’ சூறாவளி தாக்கியது.
இந்த சூறாவளியினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.
ஓடிஸ் சூறாவளியினால் மெக்சிகோவின் அகாபுல்கோ பகுதியானது கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சூறாவளியினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளதுடன் சுமார் 36 பேரை காணவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
சுமார் 273,000 வீடுகள், 600 உணவகங்கள் மற்றும் 120 மருத்துவமனைகள் சேதமடைந்துள்ளன என்றும் ,பல வணிக வளாகங்கள் இடிந்துள்ளன என்றும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை அங்குள்ள பல்பொருள் அங்காடிகள் சூறையாடப்பட்டதாகக் கிடைத்த தகவலையடுத்து, அப்பகுதி முழுவதும் சுமார் 17,000 பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan