Paristamil Navigation Paristamil advert login

Seine-Saint-Denis : காவல்துறையினர் மீது மோத முற்பட்ட மகிழுந்து! - இளைஞன் மீது துப்பாக்கிச்சூடு!!

Seine-Saint-Denis : காவல்துறையினர் மீது மோத முற்பட்ட மகிழுந்து! - இளைஞன் மீது துப்பாக்கிச்சூடு!!

30 ஐப்பசி 2023 திங்கள் 14:05 | பார்வைகள் : 18974


 

இளைஞன் ஒருவன் காவல்துறையினரின் மீது மகிழுந்தால் மோத முற்பட்ட நிலையில், துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளான்.

Blanc-Mesnil (Seine-Saint-Denis) நகரில் இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. 6.30 மணி அளவில் மகிழுந்து ஒன்றில் அதிவேகமாக பயணித்த இளைஞன் ஒருவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். 17 வயதுடைய சாரதி, காவல்துறையினரின் கட்டுப்பாட்டை மீறி தொடர்ந்து பயணித்துள்ளார். 

மகிழுந்து வேகமாக தப்பிச் செல்ல, காவல்துறையினர் சக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததுடன், மகிழுந்தை துரத்திச் சென்றனர். 

சிறிது நேரத்தில் குறித்த மகிழுந்தை தடுத்து நிறுத்தினர். ஆனால் இளைஞன் மகிழுந்தினால் காவல்துறையினரை மோத முற்பட்டுள்ளார். அதையடுத்து காவல்துறையினர் மகிழுந்தினை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். 

பின்னர் சாரதி கைது செய்யப்பட்டார். அதே மகிழுந்தில் பயணித்த மேலும் இருவரையும் கைது செய்தனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்