யாழில் மயங்கி வீழ்ந்த மாணவி உயிரிழப்பு
30 ஐப்பசி 2023 திங்கள் 06:06 | பார்வைகள் : 7509
யாழ்ப்பாணத்தில் தலைவிறைப்பு ஏற்பட்டு மயங்கி வீழ்ந்த மாணவி உயிரிழந்துள்ளார்.
சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட மாணவி சிகிச்சை பயனளிக்காமல் உயிரிழந்தார்.
குருநகரைச் சேர்ந்த ஜேசுதாஸ் அனோஜினி என்ற 10 வயதான மாணவியே உயிரிழந்தவராவார்.
குறித்த மாணவி கடந்த 21ஆம் திகதி தலைவிறைப்பு ஏற்பட்டு மயங்கி வீழ்ந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில், சிகிச்சை பயனளிக்காமல் அவர் நேற்று அதிகாலை 2 மணியளவில் உயிரிழந்தார்.
மரண விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேமகுமார் மேற்கொண்டார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan