வீடொன்றில் இருந்து துப்பாக்கிகள், 7000 வரையான ரவைகள் மீட்பு! - ஒருவர் கைது!!

28 ஐப்பசி 2023 சனி 10:44 | பார்வைகள் : 14211
வீடொன்றில் இருந்து பதினைந்துக்கும் மேற்பட்ட துப்பாக்கிகள், 7,000 வரையான துப்பாக்கி ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
Andelys (Eure) நகரில் உள்ள வீடொன்றில் இருந்தே மேற்படி ஆயுதங்கள் கடந்தவாரத்தில் மீட்கப்பட்டுள்ளன. காவல்துறையினரின் கண்காணிப்பு பட்டியலில் உள்ள (Fiché S) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகத்துக்கு இடமான நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டு அவரை காவல்துறையினர் பின் தொடர்ந்து சென்று வீட்டில் இருந்து இப்பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் 39 வயதுடையவர் என அறிய முடிகிறது. ஆயுதங்கள் எங்கிருந்து பெறப்பட்டவை என்பது தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1