வீட்டின் சுவற்றை இடித்து தள்ளிய கனரக வாகனம்! - சாரதி படுகாயம்!
27 ஐப்பசி 2023 வெள்ளி 18:02 | பார்வைகள் : 10228
Essonne நகரில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் சாரதி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
மணல் ஏற்றிச் சென்ற கனரக வாகனம் ஒன்று Mespuits நகரில் விபத்துக்குள்ளானது. கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வீதியின் அருகே உள்ள வீடொன்றில் மோதியது. இதில் வீட்டின் சுவர் இடிந்து நொருங்கியது. வாகன சாரதி படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
D63 வீதியில் இன்று காலை 5 மணி அளவில் இவ்விபத்து இடம்பெற்றதாக தீயணைப்பு படையினர் தெரிவித்தனர். இருபது வரையான தீயணைப்பு படையினர் களத்தில் போராடி நிலமையை சீர்படுத்தினர். ஒருமணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து தடைப்பட்டது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan