ரக்பி உலக்ககிண்ணம்! - பலத்த பாதுகாப்ப்பு!
27 ஐப்பசி 2023 வெள்ளி 17:41 | பார்வைகள் : 12171
2023 ஆம் ஆண்டுக்கான ரக்பி உலகக்கிண்ண போட்டிகள் நாளை சனிக்கிழமை இடம்பெற உள்ள நிலையில், Saint-Denis (Seine-Saint-Denis) நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Stade de France மைதானத்தில் இறுதிப்போட்டி நாளை இரவு இடம்பெற உள்ள நிலையில், சிறிய பறக்கும் ட்ரோன் கருவிகளூடாகவும், உலங்குவானூர்திகளூடாகவும் அப்பகுதி முழுவதும் பலத்த கண்காணிப்பு இடம்பெறும் எனவும், சில பகுதிகள் மூடப்படுகிறன எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மைதானத்தை சூழ உள்ள பகுதிகளில் பட்டாசுகள், வெடிபொருட்கள் கொண்டுசெல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், செல்லப்பிராணிகளை வீதிகளில் அழைத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாளை பிற்பகல் 1 மணியில் இருந்து நள்ளிரவு 1 மணிவரையான பன்னிரெண்டு மணிநேரங்கள் அதிகபட்ச கண்காணிப்பில் இருக்கும் எனவும், மகிழுந்துகள், மோட்டார் சைக்கிள்கள், சைக்கிள்கள், கனரக வாகங்களில் பயணிக்க அனுமதி மறுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதசாரிகளுக்கும் மட்டும் செல்ல அனுமதி உண்டு.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan