இலங்கை அமைச்சரவையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்
23 ஐப்பசி 2023 திங்கள் 09:09 | பார்வைகள் : 8058
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, சுகாதார அமைச்சராக ரமேஷ் பத்திரன இன்று முற்பகல் சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.
கைத்தொழில் அமைச்சுக்கு மேலதிகமாக அவருக்கு இந்த அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சராக மஹிந்த அமரவீர சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.
அவர் தற்போது வகிக்கும் விவசாய அமைச்சுக்கு மேலதிகமாக இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
நஷீர் அஹமட் நீக்கப்பட்டதை அடுத்து ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்பட்ட சுற்றாடல்துறை அமைச்சு, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு வழங்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan