கன மழை, வெள்ள அபாயம் காரணமாக 5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

23 ஐப்பசி 2023 திங்கள் 07:00 | பார்வைகள் : 11887
கன மழை மற்றும் வெள்ள அபாயம் காரணமாக 5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரான்சின் தென்மேற்கு மாவட்டங்களான Drôme, Ardèche, Ain, Isère மற்றும் Jura ஆகிய மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கையை Météo France விடுத்துள்ளது. அங்கு இன்று திங்கட்கிழமை 200 மில்லி மீற்றருக்கும் அதிக மழை பெய்யும் எனவும், வெள்ள அபாயம் ஏற்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், மணிக்கு 90 கி.மீ வரை புயல் வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஐந்து மாவட்டங்களுக்கும் 'செம்மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், அங்கு வசிக்கும் மக்கள் இது தொடர்பாக விழிப்புடன் இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்தவாரத்தில் இதே தென்மேற்கு பிராந்தியங்களில் Aline எனும் புயல் வீசி பலத்த சேதம் ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1