கனடாவில் துப்பாக்கி சூட்டில் முடிவடைந்த குடும்ப வன்முறை - 3 பிள்ளைகள் உட்பட 5 பேர் பலி!

25 ஐப்பசி 2023 புதன் 02:26 | பார்வைகள் : 8343
ஒன்றாரியோவின் மாரே சால்ட் பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கி சூட்டில் 3 பிள்ளைகள் உள்ளிட்ட 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
குடும்ப பிரச்சனை காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு வீடுகளில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் 41 வயதான ஒருவரும், 44 வயதான ஒருவரும், ஆறு, ஏழு மற்றும் பன்னிரெண்டு வயதான சிறுவர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தமக்கு தாமே துப்பாக்கிச் சூடு நடத்திக் கொண்டு உயிரிழந்து விட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களினால் பொதுமக்களுக்கு எவ்வித அச்சுறுத்தல்களும் கிடையாது என தெரிவிக்கப்படுகின்றது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1