Esports உலகக்கோப்பையில் அறிமுக விழாவில் கலந்துகொண்ட கிறிஸ்டியானோ ரொனால்டோ

24 ஐப்பசி 2023 செவ்வாய் 10:49 | பார்வைகள் : 9213
சவுதியில் நடைபெற இருக்கும் Esports உலகக்கோப்பை அறிமுக விழாவில் இளவரசர் முகமது பின் சல்மானை நட்சத்திர வீரர் ரொனால்டோ நேரில் சந்தித்தார்.
போர்த்துக்கல் நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி கிளப் அணியான அல் நஸரில் விளையாடி வருகிறார்.
அவரது சிறப்பான பங்களிப்பினால் அல் நஸர் அணி வெற்றிகளை குவித்து வருகிறது. இந்த நிலையில் 2024ஆம் ஆண்டு Esports உலகக்கோப்பை ரியாத்தில் தொடங்கும் என சவுதி அரேபியா அறிவித்தது.
இதுகுறித்து இளவரசர் வெளியிட்ட அறிக்கையில், Esports உலகக்கோப்பை சவுதி அரேபியாவின் பயணத்தின் இயல்பான அடுத்த படியாகும் என குறிப்பிட்டார்.
Esports உலகக்கோப்பையில் அறிமுக விழாவில் கலந்துகொண்ட கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி இளவரசரை சந்தித்து பேசினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'இன்று அரச மேன்மை இளவரசர் முகமது பின் சல்மானை மீண்டும் சந்திப்பதில் பெருமை அடைகிறேன். மேலும் விளையாட்டின் எதிர்காலம் மற்றும் அடுத்த ஆண்டு சவுதி அரேபியாவில் நடைபெறவிருக்கும் முதல் Esports உலகக்கோப்பையை அறிமுகப்படுத்துவது குறித்து விவாதிக்கும் இந்தக் குழுவில் இன்று அங்கம் வகித்ததில் பெரும் மகிழ்ச்சி!' என தெரிவித்துள்ளார்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1