பிக்பாஸ் ஜனனியின் நெகிழ்ச்சியான பதிவு..!
20 ஐப்பசி 2023 வெள்ளி 14:02 | பார்வைகள் : 9116
தளபதி விஜய் நடித்த ’லியோ’ திரைப்படம் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ஒரு சிறு கேரக்டரில் நடித்த பிக் பாஸ் ஜனனி தனது அனுபவத்தை நெகிழ்ச்சியுடன் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
இமாச்சலப் பிரதேசத்தில் காபி ஷாப் வைத்திருக்கும் கேரக்டரில் விஜய் நடித்திருந்த நிலையில் அந்த கடையில் வேலை செய்யும் பெண்ணாக பிக்பாஸ் ஜனனி நடித்திருந்தார். இவரைத்தான் மிஷ்கின் குழுவினர் தாக்க வரும்போது, விஜய் வாழ்வில் ஒரு பெரிய திருப்புமுனை ஏற்படும் என்பது படம் பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும்.
இந்த நிலையில் ’லியோ’ படத்தில் நடித்த அனுபவம் குறித்து ஜனனி தனது சமூக வலைதளத்தில் கூறிய போது ’தளபதி விஜய் உடன் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது கனவாக இருந்த நிலையில், அந்த கனவு நனவாகியதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு எனது நன்றி. எனது முதல் படமே எனக்கு மிகச்சிறந்த அனுபவத்தை கொடுத்தது என்று நெகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார். இந்த பதிவுக்கு லைக், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan