Yvelines : இளைஞன் மீது துப்பாக்கிச்சூடு! - இரு காவல்துறையினர் கைது!
22 ஐப்பசி 2023 ஞாயிறு 18:25 | பார்வைகள் : 13004
காவல்துறையினரின் கட்டுப்பாட்டை மீறி அதிவேகமாக பயணித்த சாரதி ஒருவர் மீது காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
Châteaufort (Yvelines) நகரில் இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகலின் பின்னர் இடம்பெற்றுள்ளது. Guyancourt நகரில் வைத்து காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட மகிழுந்து ஒன்று வீதியில் பயணிப்பதை பார்த்த காவல்துறையினர், குறித்த மகிழுந்தை தடுத்து நிறுத்த முற்பட்டனர். ஆனால் அதனைச் செலுத்திச் சென்ற 19 வயதுடைய இளைஞன் ஒருவர் மகிழுந்தை நிறுத்தாமல் தொடர்ந்து பயணித்துள்ளார்.
அத்தோடு அவர் காவல்துறையினர் மீது மகிழுந்தினால் மோத முற்பட்டுள்ளார்.
அதையடுத்து காவல்துறையினர் மகிழுந்து சாரதி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் குறித்த இளைஞன் காயமடைந்துள்ளார்.
உயிருக்கு போராடும் நிலையில் இளைஞன் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.
முதல்கட்ட விசாரணைகளில் இரு காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan