'தளபதி 68' அப்டேட்..

21 ஐப்பசி 2023 சனி 14:46 | பார்வைகள் : 5862
தளபதி விஜய் நடித்த ’லியோ’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வசூலை வாரி குவித்து வரும் நிலையில் தற்போது விஜய் நடித்துவரும் அடுத்த படமான ’தளபதி 68’ படத்தின் அப்டேட்கள் வெளிவர இருக்கிறது.
ஏற்கனவே ’தளபதி 68’ படத்தின் பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தாலும் ’லியோ’ படத்தின் ரிலீஸுக்கு பின்னர் தான் இந்த படத்தின் அப்டேட் வெளிவரும் என்று செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் ’லியோ’ திரைப்படம் வெளியாகி ஒரு பக்கம் வசூலை குவித்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் ’தளபதி 68’ அப்டேட்களையும் வெளியிட படக்குழுவினர் தயாராகி வருகின்றனர். அந்த வகையில் இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ ஒன்று அடுத்த வாரம் வெளியாக இருப்பதாகவும், யுவன் சங்கர் ராஜா அதற்கான பின்னணி இசை பணியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அது மட்டுமின்றி பூஜை குறித்த புகைப்படங்கள் ஆயுத பூஜை ஸ்பெஷல் ஆக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் விஜய் ரசிகர்களுக்கு அடுத்தடுத்து இனி ’தளபதி 68’ படத்தின் அப்டேட்டுகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
’தளபதி 68’ படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வருவதாகவும் சினேகா, பிரியங்கா மோகன், ஆகியோர் நாயகிகளாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி மோகன், பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்டவர்களும் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1