நானிக்கு வில்லனாகும் எஸ்.ஜே. சூர்யா
21 ஐப்பசி 2023 சனி 13:44 | பார்வைகள் : 12147
'அண்டே சுந்தரனிகி' படத்தின் இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் மீண்டும் நானி புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இது நானியின் 31வது படமாக உருவாகிறது. இதனை டிவிவி எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும், இந்த படத்தின் தலைப்பு அறிவிப்பு மற்றும் பூஜை நிகழ்ச்சி வருகின்ற அக்டோபர் 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.
ஏற்கனவே இதில் கதாநாயகியாக நடிக்க நடிகை பிரியங்கா மோகன் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியானதை தொடர்ந்து இப்போது இதில் வில்லனாக நடிக்க நடிகர் எஸ்.ஜே. சூர்யா ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்கிறார்கள். இதற்கு முன்பு எஸ்.ஜே. சூர்யா தெலுங்கில் படங்களை இயக்கியுள்ளார். மேலும் ஸ்பைடர் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். தற்போது கேம் சேஞ்சர் தெலுங்கு படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan