Paristamil Navigation Paristamil advert login

காசா மருத்துவமனை மீது தாக்குதல் செய்த இஸ்ரேயல்!  500 பேர் பலி

காசா மருத்துவமனை மீது தாக்குதல் செய்த இஸ்ரேயல்!  500 பேர் பலி

18 ஐப்பசி 2023 புதன் 08:10 | பார்வைகள் : 8355


இஸ்ரேயல்- காசா இடையே போர் தீவிரமடைந்து வருகின்றது.

இந்நிலையில் காசாவில் உள்ள அஹ்லி அரபு மருத்துவமனையைத் தாக்கிய இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் 500 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அல்-அஹ்லி மருத்துவமனையின் புகைப்படங்கள், உடைந்த கண்ணாடி மற்றும் உடல் பாகங்கள் உள்ளிட்ட புகைப்படங்களை வெளியிட்டு 500 பேர் கொல்லப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இங்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இடைவிடாத தாக்குதல்களில் இருந்து மருத்துவ சிகிச்சையை பெற்று வருகின்றனர்.

தாக்குதலில் நடத்தப்பட்ட மருத்துவமனை குழந்தைகள் நிறைந்த மருத்துவமனை என்பது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்