24 மணிநேரத்தில் - இரு காவல்துறையினர் தற்கொலை!
17 ஐப்பசி 2023 செவ்வாய் 17:13 | பார்வைகள் : 11579
கடந்த 24 மணிநேரத்தில் இரு காவல்துறையினர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
Bar-le-Duc (Meuse) நகரில் கடமையாற்றும் காவல்துறை வீரர் ஒருவர் தனது சேவைத் துப்பாக்கியை பயன்படுத்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் இடம்பெற்ற அடுத்த நான்கு மணிநேரத்தில் Dreux (Eure-et-Loir நகரைச் சேர்ந்த Rambouillet (Yvelines) காவல்நிலையத்தில் பயணிபுரியும் வீரர் ஒருவரும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இவ்விரு சம்பவங்களும் தேசிய காவல்துறையினரை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
இவ்வருடத்தில் இடம்பெறும் 20 மற்றும் 21 ஆவது காவல்துறையினரின் தற்கொலை சம்பவங்கள் இவையாகும்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan