பங்காரு அடிகளார் காலமானார்; நாளை இறுதிச்சடங்கு
19 ஐப்பசி 2023 வியாழன் 15:40 | பார்வைகள் : 7499
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவியவர் பங்காரு அடிகளார் (வயது 82). ஆன்மீகத்தில் சீர்திருத்தங்களை கொண்டு வந்த இவர், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் கருவறைக்குள் பெண்கள் சென்று பூஜை செய்யும் வழக்கத்தை கொண்டு வந்தார்.
இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பங்காரு அடிகளார் இன்று மாலை காலமானார். அவரது மறைவு பக்தர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. பங்காரு அடிகளாரின் இறுதிச்சடங்கு நாளை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019ம் ஆண்டு இவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan