Blanc-Mesnil பகுதியில் துப்பாக்கிச்சூடு - ஒருவர் பலி!
19 ஐப்பசி 2023 வியாழன் 07:00 | பார்வைகள் : 12393
Blanc-Mesnil நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 29 வயதுடைய ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
ஒக்டோபர் 16, திங்கட்கிழமை நள்ளிரவின் பின்னர் இத்துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. 2 மணி அளவில், Tilleuls எனும் பகுதியில் மகிழுந்தில் காத்திருந்த ஒருவரை நோக்கி துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. மற்றொரு மகிழுந்தில் வந்த இருவர் குறித்த நபர் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
29 வயதுடைய ஒருவரே கொல்லப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் 93 ஆம் மாவட்ட காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan