அராஸ் கொலையாளியின் தொடர்ச்சியான வன்முறை - அயலவர் சாட்சி!!

15 ஐப்பசி 2023 ஞாயிறு 09:38 | பார்வைகள் : 11730
அராஸ் நகரில் ஆசிரியரைக் கொலை செய்த மொஹமத் எனும் கொலையாளி சில வருடங்களாகவே தொடர்ச்சியான வன்முறைகளைச் செய்துள்ளான் என அயலவர் ஒருவர் சாட்சி கூறியுள்ளார்.
அவனது குணம் சில காலமாகவே மிகவும் மோசமாகி உள்ளது. அந்தப் பகுதியில் தொடர்ச்சியான வன்முறைகளில் ஈடுபட்டுள்ளான். நாங்கள் Bonjour கூறினாலும் முகத்தைத் திருப்பிக் கொண்டே செல்வான்.
தனது தாயின் மேல் மிக மோசமான வன்முறைகளை மேற்கொண்டுள்ளான். ரம்ழான் சமயத்தில் இரவு உணவு சாப்பிடக் கூடாது என அடித்துத் துன்புறுத்தி உள்ளான். அடி அடியென அடித்து, முழங்காலில் இருந்து தொடர்ச்சியாக நான்கு மணித்தியாலங்கள் அல்லாவைத் தொழுமாறு வற்புறுத்தி உள்ளான்.
அவன் இல்லாத சமயத்தில் அவனது தாய் அழுகையுடன் தனக்கு நடக்கும் வன்முறைகளைத் தெரிவித்துள்ளார்.
என இவனது வீட்டின் அருகிலுள்ள அயலவர் தெரிவித்துள்ளார்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1