Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் - தளபதி வான்தாக்குதலில் பலி! 

இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் - தளபதி வான்தாக்குதலில் பலி! 

15 ஐப்பசி 2023 ஞாயிறு 08:49 | பார்வைகள் : 9312


இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் ஒன்பது நாட்களாக  நீடித்து வருகிறது. 

இஸ்ரேலுக்கு தேவையான ஆயுத உதவிகளை அமெரிக்கா வழங்கியுள்ளது.

ஹமாஸின் நக்பா பிரிவின் தளபதியான பில்லால் அல்-கெத்ரா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. 

அத்துடன் வடக்கு காஸா மக்கள் உடனடியாக தெற்கு பகுதிக்கு செல்ல வேண்டும் என்றும் பாதுகாப்புப்படை எச்சரித்துள்ளது. 

இதற்கிடையில் வடக்கு காஸாவில் உள்ள ஹமாஸ் நிலைகள் மீது தரைவழி, வான்வழி மற்றும் கடல்வழி என முப்படை தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வருவதாகவும் அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் - ஹமாஸ் போரில் 3,500க்கும் மேற்பட்டோர் பலியானதாக தெரிய வந்துள்ளது.  

வர்த்தக‌ விளம்பரங்கள்