யாழில் இளம் குடுப்பப் பெண் எடுத்த விபரீத முடிவு

15 ஐப்பசி 2023 ஞாயிறு 03:53 | பார்வைகள் : 8798
பருத்தித்துறை பகுதியில், கணவருடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக தவறான முடிவெடுத்து (தனக்குத்தானே தீ மூட்டிய) இளங்குடும்பப் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கற்கோவளம், பருத்தித்துறையைச் சேர்ந்த குமரன் கர்னிகா (வயது- 29) என்ற மூன்று பிள்ளைகளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கணவனுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக குறித்த பெண் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தனக்குத்தானே தீ மூட்டியுள்ளார்.
தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
அங்கு தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (14) சனிக்கிழமை அதிகாலை உயிரழந்துள்ளார்.
குறித்த மரணம் தொடர்பில் யாழ். போதன வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி அன்ரலா விஞ்சன்தயான் விசாரணைகளை மேற்கொண்டார். சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1